14640 பொற்கனவு.

வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). சுவிட்சர்லாந்து: I.T.R. ஊடக வலையமைப்பு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). 135 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-71331-1-9. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, முகநூல், இணையத்தளம் என்று வீசிய வேலணையூர் கவிக்காற்று முதற் படைப்பாக பொற்கனவு என்னும் கவிதைத் தொகுப்பை சுமந்து வருகின்றது. கவிதை என்பது உள்ளத்து உணர்வுகளின் பிரசவம். அது படிப்போரையும் படைப்போரையும் செம்மைப்படுத்தும் ஊடகம். அழகையும், இனிமையையும் நல்ல சிந்தனையையும் வாசகனில் நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தும் கவிதைகள் காலத்தால் அழியாது நின்று நிலைக்கும். அவ்வகையில் சமூகக் கருத்துக்களைச் சுமந்துவரும் இக்கவிதைத் தொகுதி வாசகர் மனதில் நிச்சயமாக இடம்பிடிக்கும்.

ஏனைய பதிவுகள்