14641 மடிவேன் என்று நினைத்தாயா?

மு.தயாளன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2019. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 120 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-4041-15-8. இலக்கியம் என்பது மக்களுக்கானது என்ற கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டவரான மு.தயாளனின் 60 மரபுக் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவரது கவிதைகள் மரபு சார்ந்து இருந்தாலும் அவை சொல்ல வந்த விடயங்கள், நவீன சிந்தனை கொண்டவை. மரபும்-நவீனமும் இங்கு கைகுலுக்கிக் கொள்கின்றன. இவரது கவிதைகள் வாசிக்க இலகுவானவை மாத்திரமல்ல. ஓசை நயத்துடன் பாமர மக்களும் அவற்றைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்நூல் மகுடம் வெளியிட்டகத்தின் 21ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

14737 அவளுக்கு தெரியாத ரகசியம்.

வெலிவிட ஏ.சீ.ஜரீனா முஸ்தபா. மாவனல்ல: எக்மி பதிப்பகம், 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (கொழும்பு 14: ஐ.பீ.சீ.அச்சகம், 24, டி வாஸ் ஒழுங்கை). xvii, 218 பக்கம், விலை:

13A28 – மெய்கண்டதேவர் அருளிச்செய்த சிவஞானபோதமும் வர்த்திகமெனும் பொழிப்புரையும்.

மெய்கண்டதேவர் (மூலம்), சிவஞான சுவாமிகள் (சிற்றுரை), ஆறுமுகநாவலர் (பரிசோதித்தவர்). சிதம்பரம்: முதலியார் ஜி.சுப்பிரமணியம், தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 4வது பதிப்பு, தை, 1949, 1வது பதிப்பு, பார்த்திப வருடம், வைகாசி மாதம் 1885).