மு.தயாளன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2019. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 120 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-4041-15-8. இலக்கியம் என்பது மக்களுக்கானது என்ற கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டவரான மு.தயாளனின் 60 மரபுக் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவரது கவிதைகள் மரபு சார்ந்து இருந்தாலும் அவை சொல்ல வந்த விடயங்கள், நவீன சிந்தனை கொண்டவை. மரபும்-நவீனமும் இங்கு கைகுலுக்கிக் கொள்கின்றன. இவரது கவிதைகள் வாசிக்க இலகுவானவை மாத்திரமல்ல. ஓசை நயத்துடன் பாமர மக்களும் அவற்றைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்நூல் மகுடம் வெளியிட்டகத்தின் 21ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.