14644 மனப் பூக்கள்(கவிதைத் தொகுதி).

செ.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: திருமதி விஜயலட்சுமி திருநாவுக்கரசு, 15, பண்டாரக் குளம் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 2018. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). ix, 95 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-955-52960-9-0. சுதந்திரன், வலம்புரி, உதயன், கலைமுகம், கலைமலர், அருள் ஒளி, சிவபூமிமுதியோர் இல்லப் பத்தாவது ஆண்டுச் சிறப்புமலர் ஆகிய ஏடுகளில் பிரசுரமான ஆசிரியரின் 47 கவிதைகளின் தொகுப்பு. பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு, “அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்” என்ற கவிதையில் தொடங்கி “சாந்திகப் பேரொளியே” என்ற கவிதையுடன் இத்தொகுப்பை நிறைவுசெய்துள்ளார். கவிஞர் திருவின் கவிதைகளிலே சொற்கள், சொற்றொடர்கள் இசைவுபெற்று வருவதைக் காணமுடிகின்றது. பொருளுக்கு ஏற்றவகையில் சொற்களைத் தெரிவுசெய்து பொருத்தமுற அமைத்துச் செல்கின்றார். சமூகச் செய்திகள், வாழ்த்துக்கள், வழிபாடுகள், இரங்கல்கள், பழைய நினைவுகள், உள்ளத்தைத் தொட்ட உணர்வுகள் எனப் பல்வேறு விடயங்கள் உள்ளடங்குகின்றன.

ஏனைய பதிவுகள்