14651 முகை விடும் மொட்டுக்கள் (கவிதைத் தொகுப்பு).

எம்.ரஸ்லான் ராஸீக். கொழும்பு 6: இலங்கை தமிழோசை இணைய வானொலி, 10 ½, 42ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2011. (மாவனல்ல: ஸ்மார்ட் அச்சகம்). xiv, 57 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 21.5×12 சமீ., ISBN: 978-955-51323-1-2. கவிஞர் எம்.ரஸ்லான் ராஸீக், மாவனல்லை மாலியத்தையைச் சேர்ந்தவர். இலங்கை தமிழோசை இணைய வானொலியின் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணியாற்றுபவர். இத்தொகுப்பில் இவர் எழுதிய மொட்டவிழும் மலர்கள், மன்னிக்க வேண்டும் தோழா, மலர் இழந்த செடி, அழைப்பு, ந(த)ங்கைக்கு நன்றி, வாழ்க தமிழ் வளர்க தமிழோசை, (சீ)தானம், பைத்துல் முகத்தீஸ், பைத்தியக்காரன், சுவனப் பாதையில், ஆசானே, இஸ்லாமியக் கடமையில், விலைபோகும் ஆண்மை, என் சாச்சிக்காய், அடுப்பங்கரை விளக்கல்ல, ஐமிய்யாவே, ஓர் ஆத்மா ஓய்கிறது, உலக அரசாட்சி, நண்பர்கள், இலங்கையில் முஸ்லிம்கள், பேனை, இலங்கை மண்ணிலே, சுவனத்தை நோக்கி, அரசியல்வாதிகள், எனக்கொரு உதவி, நானும் உன்னில், ஒளிமயமான எதிர்காலம் ஆகிய 27 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14118 களுவாஞ்சிக்குடி சைவ மகாசபையின் பொன்விழா சிறப்பு மலர் 1952-2002.

மலர் வெளியீட்டுக் குழு. களுவாஞ்சிக்குடி: சைவ மகாசபை, 1வது பதிப்பு, 2002. (களுவாஞ்சிக்குடி: நியு குட்வின் அச்சகம்). viii, 95 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ. இம்மலரில் ஆசிச்செய்திகளைத் தொடர்ந்து,

14318 நீதிமுரசு 1997.

எம்.றிஸ்வி ஜவ்ஹர்ஷா (மலராசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம்இ 244இ ஹல்ஸ்டப் வீதிஇ 1வது பதிப்புஇ செப்டெம்பர் 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்இ 48 டீஇ

14135 தாந்தாமலை மாட்சி: தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு மலர்-2011.

பாலிப்போடி இன்பராஜா (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: தாந்தாமலை முருகன் ஆலய பிள்ளையார் கோயில் குடமுழுக்கு விழா மலர்க்குழு, கொக்கட்டிச்சோலை, 1வது பதிப்பு, ஜுலை 2011. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). 215 பக்கம், 24 தகடுகள்,