14654 மொழிபெயர்க்கப்பட்ட மௌனம்.

வேல். சாரங்கன். யாழ்ப்பாணம்: வேல். சாரங்கன், 30ஆம் அணி, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). xvi, 79 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-52013-0-8. மூன்றாமாண்டு மருத்துவபீட மாணவரான வேல் சாரங்கனின் கவிதைத் தொகுதி. மௌனம் எந்த வரையறைகளுக்குள்ளும் சிக்காமல், எந்த இன-மத-தேச எல்லைகளுக்குள்ளும் கட்டுண்டு போகாமல், வார்த்தைகளுக்குள் தன்னைத் தொலைக்காமல், வசனங்களினூடான மொழிக்கலப்புகளில் வசப்பட்டுப் போகாமல், என்றும் இளமையாய், என்றும் புதுமையாய் இருக்கும் ஒரே மொழி இது. புரிதல் என்னும் எல்லையில் போரிட்டுக் கொண்டிருக்கும் மௌனம் அவ்வப்போது வெற்றிவாகை சூடுகின்றது. அடிக்கடி தொலையுண்டும் போகின்றது. பலவேளைகளில் புரிந்தும் புரியாமலும் புதிராகவே போய்விடுகின்றது. இந்த மௌனத்தைத் தன் கவிதைகளினூடாக மொழிபெயர்த்திருக்கிறார் இவ்விளம் கவிஞன்.

ஏனைய பதிவுகள்

Smart Technologies for Traffic

As congestion in urban areas is becoming a major problem, cities are turning to advanced technologies for traffic to improve the safety of roads and