14654 மொழிபெயர்க்கப்பட்ட மௌனம்.

வேல். சாரங்கன். யாழ்ப்பாணம்: வேல். சாரங்கன், 30ஆம் அணி, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). xvi, 79 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-52013-0-8. மூன்றாமாண்டு மருத்துவபீட மாணவரான வேல் சாரங்கனின் கவிதைத் தொகுதி. மௌனம் எந்த வரையறைகளுக்குள்ளும் சிக்காமல், எந்த இன-மத-தேச எல்லைகளுக்குள்ளும் கட்டுண்டு போகாமல், வார்த்தைகளுக்குள் தன்னைத் தொலைக்காமல், வசனங்களினூடான மொழிக்கலப்புகளில் வசப்பட்டுப் போகாமல், என்றும் இளமையாய், என்றும் புதுமையாய் இருக்கும் ஒரே மொழி இது. புரிதல் என்னும் எல்லையில் போரிட்டுக் கொண்டிருக்கும் மௌனம் அவ்வப்போது வெற்றிவாகை சூடுகின்றது. அடிக்கடி தொலையுண்டும் போகின்றது. பலவேளைகளில் புரிந்தும் புரியாமலும் புதிராகவே போய்விடுகின்றது. இந்த மௌனத்தைத் தன் கவிதைகளினூடாக மொழிபெயர்த்திருக்கிறார் இவ்விளம் கவிஞன்.

ஏனைய பதிவுகள்

12581 – நவீன விஞ்ஞானம்(முழு அலகுகளும்): ஆண்டு 8.

ஐ.ஜெகநாதன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1986. (அச்சுவேலி: ராஜா அச்சகம்). (4), 137 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 19.00, அளவு: 21×14 சமீ.

12446 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1998.

மலர்க் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1998. (கொழும்பு: Kadds Publications). (170)

14270 சனநாயகம் என்றால என்ன?.

ஜோன் பி.பிராங், செஸ்டர் ஈ ஃபின், மத்தியூ ஹன்டல், எரிக் செனோவத் (ஆங்கில மூலம்)இ சோ.சந்திரசேகரன், டி.தனராஜ், மா.கருணாநிதி (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்).கொழும்பு 5: மார்கா நிறுவகம், 61, ,சிப்பத்தன மாவத்தைஇ 1வது

14721 வாழ்தல் மீதான வன்முறைகள்: சிறுகதைகள்.

காத்தநகர் முகைதீன் சாலி. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2010. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). viiiஇ 09-80 பக்கம், விலை:

12913 – செயலாளர் செல்லச்சாமி: வாழ்க்கை வரலாறு.

சி.அழகுப்பிள்ளை. மாத்தளை: கவிஞர் சி. அழகுப்பிள்ளை, எல்கடுவ உன்னஸ்கிரிய தோட்டம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்). 8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14.5