ஷியா (இயற்பெயர்: கே.ஷிபானா). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/663/675 பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (7), 8-88 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22×14 சமீ., ISBN: 978-624-00-0189-2. கே.ஷிபானாவின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் புதுக்கவிதைப் பாங்கில் அமைந்துள்ளன. அவரது தனிப்பட்ட வாழ்வியல் பற்றிய அறிதலை ‘என்னுரை”யில் குறிப்பிட்டிருக்கிறார். அதை வாசித்தபின்னர் கவிதைகளை வாசிக்கும்போது இக்கவிதைகளையிட்டு புதியதொரு தரிசனம் கிட்டுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65494).