14659 விரல்சூப்பி.

ப.கனகேஸ்வரன் (புனைபெயர்: கே.ஜி). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xii, 85 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-4096-04-2. அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் மலையகக் கவிஞர் கேஜீயின் புதுக்கவிதைகளின் தொகுப்பு. “துளிர்” என்ற இவரது முதலாவது தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் அறியப்பட்டவர் பொகவந்தலாவை ப.கனகேஸ்வரன். இவரது கவிதைகளில் புதுமைகள் இருக்கும். அனுபவத்தை கவித்துவத்துடன் சுருக்கமாகச் சொல்லிச்செல்லும் போக்கும் காணப்படுகின்றது. இத்தொகுப்பில் 74 புதுக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஆவேசம், தாளாத கோபம், பாசம், உருக்கம், வெறுப்பு, விரக்தி, பலவித ஏக்கங்கள், பச்சாத்தாபம், நட்பின் உயர்வு, பெண்மையின் நிலை, எனப் பல கோணங்களில் இவரது கவிதைகள் கருக்கொண்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14957 புத்தொளி சிவபாதம் (05.12.1932-30.11.2004): வாழ்வும் பணியும்(நினைவு மலர்).

மலர்க் குழு. ஆனைக்கோட்டை: திருமதி சி. ருக்குமணிதேவி, செல்வ அகம்,1வது பதிப்பு, டிசம்பர் 2004. (யாழ்ப்பாணம்: திருச்செல்வி அச்சகம்).ஒஒiஒஇ 70 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,அளவு: 20.5×15 சமீ.அமரர் நமசிவாயம் சிவபாதம் (புத்தொளி)

12290 – இலங்கையிற் கல்வி: கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதல் இற்றை வரை: நூற்றாண்டுவிழா மலர் (பகுதி 1).

நூற்றாண்டு விழா மலர்க் குழு. கொழும்பு: இலங்கை கல்வி கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு: அரசாங்க அச்சகப் பகுதி). lxxxvi 405 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 525., அளவு:

14913 இரும்பு மனிதன் நாகநாதன்.

சோழன் (புனைபெயர்: மலேயன் மணியம்). திருக்கோணமலை: மலேயன் மணியம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1966. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194A, பண்டாரநாயக்க மாவத்தை). 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

12516 – பிள்ளைகளுக்குச் சமாதானத்தைக் கற்பித்தல்:

ஓர் மாதிரிப் பாடத்திட்டம் (உயர் இடைநிலை வகுப ;புகளுக ;காக). ஏ.எஸ்.பாலசூரிய (ஆங்கில மூலம்), ஆர்தர் ஜோன்ஸ் பெர்னாண்டோ (தமிழாக்கம்), தை.தனராஜ் (பதிப்பாசிரியர்). மகரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை, தேசியகல்வி நிறுவகம், 1வது பதிப்பு,

12035 விடுதலை இறையியல்.

ஞானமுத்து விக்ரர் பிலேந்திரன். யாழ்ப்பாணம்: ஆயர் இல்லம், 1வது பதிப்பு, ஜுலை 2009. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், பண்டத்தரிப்பு). (ii), 18 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-96653-7-3.