ப.கனகேஸ்வரன் (புனைபெயர்: கே.ஜி). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xii, 85 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-4096-04-2. அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் மலையகக் கவிஞர் கேஜீயின் புதுக்கவிதைகளின் தொகுப்பு. “துளிர்” என்ற இவரது முதலாவது தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் அறியப்பட்டவர் பொகவந்தலாவை ப.கனகேஸ்வரன். இவரது கவிதைகளில் புதுமைகள் இருக்கும். அனுபவத்தை கவித்துவத்துடன் சுருக்கமாகச் சொல்லிச்செல்லும் போக்கும் காணப்படுகின்றது. இத்தொகுப்பில் 74 புதுக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஆவேசம், தாளாத கோபம், பாசம், உருக்கம், வெறுப்பு, விரக்தி, பலவித ஏக்கங்கள், பச்சாத்தாபம், நட்பின் உயர்வு, பெண்மையின் நிலை, எனப் பல கோணங்களில் இவரது கவிதைகள் கருக்கொண்டுள்ளன.