14660 விழித்திருங்கள்.

நெல்லை லதாங்கி (இயற்பெயர்: ஆனந்தராணி நாகேந்திரன்). நெல்லியடி: திருமதி ஆனந்தராணி நாகேந்திரன், மகாத்மா வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). v, 55 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-53908-5-9. நெல்லை லதாங்கி சமூகம் பற்றிய உணர்வுள்ள ஒரு கவிஞர். போர் ஏற்படுத்திய பேரழிவு, பொறுப்பில்லாத இளைஞர்கள் ஏற்படுத்திவரும் சமூகச் சீரழிவு, நீறுபூத்த நெருப்பாகக் கிடக்கும் சாதியத்தின் கூறுகள் என்பனவற்றை தன் கவிதைகளில் பதிவுசெய்கின்றார். துடக்கு, தொல்லைபேசி, அன்னை, நேசி, மந்தை போல வாழ்வது ஏன்?, நாய்களா பேய்களா? உம்மணாமூஞ்சிகள், உழைப்பு, துவேசம், எது அழகு, நம்ப முடிகிறதா? எல்லோரும் இன்புற்றிருக்க, நாம் மாறோம், இணைவேன் உன் மனைவியாக, அந்தரத்தில் தொங்கினவே, அன்பு செய்ய, மறந்து வாழ, விதிவிலக்கு, காதலர் தினத்தினிலே, குனிவு, விழித்தெழுங்கள், யாரவள், விதி-சதி-மதி ஆகிய 23 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்