14661 விளம்பரம் ஒட்டாதீர்.

ப.கனகேஸ்வரன் (புனைபெயர்: கே.ஜி). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). viii, 46 பக்கம், விலை: ரூபா 150.,அளவு: 17.5×11.5 சமீ., ISBN: 978-955-4096-05-9. கவிஞர் கேஜீயின் புதுக்கவிதைகளின் தொகுப்பு. துளிர் என்ற தொகுப்பின்மூலம் இலக்கிய உலகில் அறியப்பட்டவர் ப.கனகேஸ்வரன். இவரது கவிதைகளில் புதுமைகள் இருக்கும். அனுபவத்தை கவித்துவத்துடன் சுருக்கமாகச் சொல்லிச் செல்லும் போக்கு காணப்படுகின்றது. மேலோட்டமாக வாசிக்கும்போது சாதாரணமாகத் தோன்றும் இவரது கவிதைகளின் உள்ளோட்டம் ஆழமான கருத்தைப் பொதிந்து வைத்திருப்பதை தீவிர வாசகர்கள் உணரலாம். பசுமையைப் போற்றும் பாங்கு இவரது கவிதைகளில் துலக்கமாகக் காணப்படுகின்றது. மரங்களைப் பாதுகாத்து இயற்கையைப் பேணுதல், சீவகாருண்யம், சூழல் மாசுபடுதலுக்கான எதிர்ப்புக்குரல்கள் என்பவை இவருடையவை.

ஏனைய பதிவுகள்

MrO Casino No deposit

Posts Finest alternative for C$5 deposit: CasiGO 🎲 Greatest Form of €20 No deposit Added bonus Games What do I must fool around with an