14662 வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை.

நெடுந்தீவு முகிலன். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, மார்ச் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). viii, 99 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-40961-3-4. இக்கவிதைத் தொகுப்பு பெண்கள் பற்றிப் பேசப்பட்ட பல விடயங்களை உள்ளடக்குகின்றது. “உடைந்த நிழலின் குரல்” என்னும் கவிதையில் தொடங்கி “முடிவுறாத துயர்களுக்கான முற்றுப்புள்ளி” என்ற கவிதை வரை 70 கவிதைகள் இருக்கின்றன. காதல் துயரங்களும், தவிப்புக்களும், பிரிவுகளும், அதனால் வேதனைகளும், விபச்சாரங்களும் ஆண்களின் காமப்பசிக்கு ஆளாகும் பெண்களின் அவலங்களும் நாட்டை நேசித்த பெண்ணின் கனவு, எனத் தன்னை ஒரு பெண்ணாகப் பாவனை செய்து அந்த இடத்தில் நின்று இக்கவிஞர் கவிதை புனை கின்றார். தான் கண்கூடாகக் கண்ட பல பெண்களின் உண்மை நிலைகளைத்தான் இந்நூலில் தந்திருப்பதாகச் சொல்லுகின்றார்.

ஏனைய பதிவுகள்