14665 அலகில் சோதியன்(நாடகங்கள்).

பொ.சத்தியநாதன். வவுனியா: இந்து மன்றம், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xix, 78 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5000-00-5. இந்நூலில் ஏகலைவன் -ஓர் அறிமுகம், ஏகலைவன் (ஆடற்கதை, புத்தாக்க நாடகம்), அலகில் சோதியன் -ஓர் அறிமுகம், அலகில் சோதியன் (ஆடற்கதை), வந்ததே வசந்தம் -ஓர் அறிமுகம், வந்ததே வசந்தம் (ஆடற்கதை, புத்தாக்க நாடகம்), பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் -ஓர் அறிமுகம், பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் (ஆடற்கதை), நளதமயந்தி-ஓர் அறிமுகம், நளதமயந்தி (ஆடற்கதை), உணவைப் பேணுவோம் -ஓர் அறிமுகம், உணவைப் பேணுவோம் (வீதி நாடகம்), நஞ்சுண்ட கண்டம் -ஓர் அறிமுகம், நஞ்சுண்ட கண்டம் (வீதி நாடகம்). தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் (வீதி நாடகம்), ஆகிய படைப்பாக்கங்களை இடம்பெறச்செய்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்ட இந்நாடகாசிரியர், தனது பின்கல்விப் பட்டத்தினை கல்வியியலில் பெற்றுக்கொண்டவர். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரிய கல்வியியல் முதுமாணிப் பட்டமும் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி முகாமைத்துவப் பட்டயமும் பெற்றவர். வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் துணைநிலைப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

ஏனைய பதிவுகள்