ஏ.ஏ.ஜுனைதீன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661,665,675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (9), 10-240 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30- 9375-2. இத்தொகுப்பில் உமர் முக்தார், அனார்கலி, வீர சிவாஜி, மரணமே வெல்லும், மானபங்கம், அந்த ஏழு மணி இருபது நிமிடம், மனிதன் இன்னும் மாறவில்லை, மதி செய்த சதி, மதியை வென்ற விதி, வழித் துணை ஆகிய பத்து வானொலி நாடகங்கள் அடங்கியுள்ளன. இவை பேராதனை ஏ.ஏ.ஜுனைதீன் அவர்களால் எழுதப்பட்டவை. இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் எம்.அஷ்ரப்கான் அவர்களாலும், தமிழ்ச் சேவை, கல்விச் சேவைகளில் காலஞ்சென்ற எஸ். கணேஸ்வரனாலும் ஒலிபரப்பப்பட்டவை. ஏ.ஏ.ஜுனைதீன் வழங்கும் இரண்டாவது நாடகத் தொகுப்பு இது. முன்னர் “எனது வானொலி நாடகங்கள்” என்ற தலைப்பில் 1999இல் இவரது முதலாவது வானொலி நாடக நூல் வெளிவந்துள்ளது.