கே.செல்வராஜன். கொழும்பு 15: திருமதி கௌசலாதேவி செல்வராஜன், சினிலேன்ட் வெளியீடு, 162/626/ 1/1, கிம்புலாஎல, மாதம்பிட்டி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (கொழும்பு: பிருந்தா எண்டர்பிரைசஸ்). xxi, 99 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-38038-1-8. தன் மனைவியை இழந்த, 38 வயதான கௌரவமான மனிதர் ராஜசேகர், 28 வயதான அவரது தம்பி திலீபன், குடும்ப நண்பரும் பிரம்மச்சாரியுமான மாணிக்கம், ராஜசேகரின் மாமனாரான குடிகாரரான மாதவன், மாதவனின் இளம் மகள் நந்தினி, மாணிக்கத்தின் தூரத்து உறவினரான இளம்பெண் கவிதா மற்றும் குடும்ப டாக்டர் சரவணன் ஆகியோரைச் சுற்றி இந்நாடகம் சுவையாகப் பின்னப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளாகக் கலைப் பணியாற்றிவரும் கே.செல்வராஜன், 1973இல் தனது 20ஆவது அகவையில் “கேளுங்கள் தரப்படும்” என்ற சமூக சீர்திருத்த நாடகத்தை எழுதிக் கலையுலகில் தடம் பதித்தவர். 1974இல் “சிலோன் யுனைட்டெட் ஆர்ட் ஸ்டேஜ்” என்ற கலை நிறுவனத்தை ஆரம்பித்து அதன்மூலம் தனது கதை-வசனம்-நெறியாழ்கையில் “உறவுகள்” என்ற நாடகத்தை மேடையேற்றினார். தொடர்ந்து நாடகம், பாடலாக்கம், குரல்மாற்றம் (டப்பிங்), சமூகம், ஆன்மீகம் எனப் பல துறைகளிலும் அவரது பணி தொடர்கின்றது. 1992இல் அரச தமிழ் நாடகவிழாவில் கலைஞர் உதயகுமாரின் “சலங்கையின் நாதம்” வரலாற்று நாடகத்திற்கான சிறந்த தயாரிப்பாளர், சிறந்த நெறியாளர் விருதுகளையும், 1994 நாடகவிழாவில் “பூகம்பம்” நாடகத்துக்காக பணப் பரிசையும், 2000ஆம் ஆண்டு அரச நாடக விழாவில் “மௌனத்திரை” நாடகத்திற்காக சிறந்த தயாரிப்பாளர் விருதினையும் பெற்றுக்கொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63628).
New Via le web Salle de jeu Australia 2023
Aisé Casino Avec Incertain Accessible Í tous les Champions Gaulois Sans Téléchargement Et À l’exclusion de Archive Miami Hotel Melbourne Salle de jeu World Slots