மறவன்புலோ செல்லம் அம்பலவாணர். கொழும்பு 15: மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: கே.ஜே.என்டர்பிரைசஸ், 63, விகாரை ஒழுங்கை). xxxii, 146 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42626- 6-9. இலங்கை வானொலியில் 1990களில் இருந்து தொடர்ந்து எழுதியும் நடித்தும் வரும் இந்நூலாசிரியர் ஏற்கெனவே பஞ்சாமிர்தம் (சிறுவர் வானொலி நாடகங்கள், 2015), சட்டத்தின் திறப்பு விழா (வானொலி நாடகங்கள், 2016), பஞ்சாயுதம் (நாடகங்கள், 2017), மனவைரம் (வானொலி நாடகங்கள், 2018), வண்டல் மண் (சிறுவர் கதைகள், 2018) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தில் 39 வருடகாலம் சேவையாற்றியவர். இந்நூலில் இடம்பெறும் ஐந்து நாடகங்களில் நான்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பானவை.