14676 அசை: சிறுகதைத் தொகுப்பு.

க.கோபாலபிள்ளை. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/663/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (8), 9-176 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×14 சமீ., ISBN:978-624-00-0188-5. இச்சிறுகதைத் தொகுப்பில் க.கோபாலபிள்ளை எழுதிய பிராயச்சித்தம், யாருமில்லா உலகத்திலே, கொள்ளி, பிறந்த மண், காலமெனும் நல்லாசான், பிரளயம், பதுங்குகுழி, காட்சியில் ஒரு மாற்றம், இன்னும் எத்தனை உயிரோ, தீர்வைத் தராத தீர்ப்புக்கள், தலைமுறை இடைவெளி ஆகிய பதினொரு கதைகள் இடம்பெற்றுள்ளன. 1948 புரட்டாதி மாதத்தில் ஆறுகால்மடம்-ஆனைக் கோட்டையில் பிறந்த கோபாலபிள்ளை, தனது ஆரம்பக் கல்வியை யாழ். பெரியபுலம் மெதடிஸ்த பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ். இந்துக் கல்லூ ரியிலும் கொக்குவில் பல்தொழில்நுட்பக் கல்லூரியிலும் மேற்கொண்டார். 1973இல் இலங்கைக் கடற்படையின் தலைமைக் காரியாலயத்தில் தட்டெழுத்தாளராக முதல் நியமனம் பெற்று 1974இல் சுருக்கெழுத்தாளராக யாழ். மேல் நீதிமன்றில் நியமனம் பெற்றார். 1989 முதல் இலங்கை பாராளுமன்றத்தின் ஹன்சார்ட் திணைக்களத்தில் இணைந்து படிப்படியான பதவி உயர்வுகளைப் பெற்று ஹன்சார்ட் பிரதிப் பதிப்பாசிரியராக (Deputy Editor of Hansard) பதவி வகித்து 2008இல் ஓய்வுபெற்றார். 1973இல் இருந்தே எழுத்துலகில் ஈடுபட்ட இவர் 2014இல் தனது முதலாவது சிறுகதைத் தொகுதியை “யாரிலிகள்” என்ற தலைப்பில் வெளியிட்டவர். இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65511).

ஏனைய பதிவுகள்

14019 பத்திரிகை ஆசிரியர்களுக்கான கையேடு.

ஆர். பாரதி. கொழும்பு 5: இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, 96, கிருல்ல வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22