14676 அசை: சிறுகதைத் தொகுப்பு.

க.கோபாலபிள்ளை. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/663/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (8), 9-176 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×14 சமீ., ISBN:978-624-00-0188-5. இச்சிறுகதைத் தொகுப்பில் க.கோபாலபிள்ளை எழுதிய பிராயச்சித்தம், யாருமில்லா உலகத்திலே, கொள்ளி, பிறந்த மண், காலமெனும் நல்லாசான், பிரளயம், பதுங்குகுழி, காட்சியில் ஒரு மாற்றம், இன்னும் எத்தனை உயிரோ, தீர்வைத் தராத தீர்ப்புக்கள், தலைமுறை இடைவெளி ஆகிய பதினொரு கதைகள் இடம்பெற்றுள்ளன. 1948 புரட்டாதி மாதத்தில் ஆறுகால்மடம்-ஆனைக் கோட்டையில் பிறந்த கோபாலபிள்ளை, தனது ஆரம்பக் கல்வியை யாழ். பெரியபுலம் மெதடிஸ்த பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ். இந்துக் கல்லூ ரியிலும் கொக்குவில் பல்தொழில்நுட்பக் கல்லூரியிலும் மேற்கொண்டார். 1973இல் இலங்கைக் கடற்படையின் தலைமைக் காரியாலயத்தில் தட்டெழுத்தாளராக முதல் நியமனம் பெற்று 1974இல் சுருக்கெழுத்தாளராக யாழ். மேல் நீதிமன்றில் நியமனம் பெற்றார். 1989 முதல் இலங்கை பாராளுமன்றத்தின் ஹன்சார்ட் திணைக்களத்தில் இணைந்து படிப்படியான பதவி உயர்வுகளைப் பெற்று ஹன்சார்ட் பிரதிப் பதிப்பாசிரியராக (Deputy Editor of Hansard) பதவி வகித்து 2008இல் ஓய்வுபெற்றார். 1973இல் இருந்தே எழுத்துலகில் ஈடுபட்ட இவர் 2014இல் தனது முதலாவது சிறுகதைத் தொகுதியை “யாரிலிகள்” என்ற தலைப்பில் வெளியிட்டவர். இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65511).

ஏனைய பதிவுகள்

12741 – சுதந்திர இலங்கை: செய்யுள் திரட்டு (ஜே.எஸ்.சி.அல்லது எட்டாம் வகுப்பு).

மந்திரிகிரகோரி. கொழும்பு 12: மந்திரி கிரகோரி அன் கோ, 101 ஆர்மர் வீதி, மசங்காவீதிச் சந்தி, 1வது பதிப்பு, 1946. (கொழும்பு 12: மந்திரி கிரகோரி அன் கோ). vi, 128 பக்கம், விலை:

Vuelve La Copa Codere Internacional

Vuelve La Copa Codere Internacional Promo El Parlay Diario De Deportes En Codere México Guía Content ¿cómo Puedo Contactar The Codere México? ¿cuál Es Un