14678 ஆற்றங்கரை மற்றும் பிற கதைகள்.

ஸபீர் ஹாபிஸ். சாய்ந்தமருது: அல்ஹ{தா பப்ளிகேஷன், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 130 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 955-8911-01-X. நான்-மனம்-அவள், பசி, அறு, பயணம், பாத்தும்மா, வெளிச்சம், வயல், நிறங்கள், அயல்வீடு, ஆற்றங்கரை ஆகிய பத்துச் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. பின்னிணைப்பில் “ஆற்றங்கரை மற்றும் பிற கதைகளுடன் ஸபீர் ஹாபிஸ்”, “பசுமை நினைவுகள்” ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. “தமது ஆற்றங்கரை கதை மூலம் நவீன கதைசொல்லிகளில் ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் ஸபீர் ஹாபிஸ். தமது மண்ணின் வாழ்வையும் வாழ்வு சார்ந்த மனிதர்களையும் எழுத்தில் கோட்டுச் சித்திரங்களாக உயிர்கொண்டு உலவவிடுகிறார். நம்மோடு நேற்று வாழ்ந்தவர்கள் இன்று வாழ்பவர்கள் எல்லோரும் கதாமாந்தர்களாக கைகோர்த்து வருகிறார்கள். உன்னதமானதோர் தமிழ்நடை இவை எல்லாவற்றையும் சாத்தியமாக்கியிருப்பது ஸபீரின் பாக்கியமா? நமது பாக்கியமா? ஸபிரின் ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் இடையே ஒரு மாயப்பாலம் இணைக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஒரே மூச்சில் கதைகளை வாசிக்கும்போது கதைகளனைத்தும் ஒரு நேர்கோட்டில் சென்று நிறைவது அலாதியானதோர் அனுபவம்” (எஸ்.எல்.எம்.ஹனிபா. மன்னுரையில்).

ஏனைய பதிவுகள்

12043 அம்பிகையின் மகத்துவங்கள்.

தம்பிப்பிள்ளை காசிநாதன். யாழ்ப்பாணம்: தம்பிப்பிள்ளை காசிநாதன், ஓய்வுபெற்ற பிரதிப் பதிவாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1998. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், கந்தர்மடம்). (14), xiv, 77 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

12151 – திருவாசக ஆராய்ச்சியுரை: இரண்டாம் பாகம்.

சு.அருளம்பலவனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி வி.அருளம்பலம், காரைநகர், 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்). xviiiஇ 481-1402 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ. மணிவாசகர் அருளிச் செய்த திருவாசகத்திற்கு

12961 – தென் கிழக்கு ஆசியா.

ஈ.எச்.ஜீ.டொபி (ஆங்கில மூலம்), சோ.செல்வநாயகம் (தமிழாக்கம்). கொழும்பு 3: இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1970. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xviii, 496 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12057 – திருத்தொண்டர் திருநெறி: ஆய்வரங்கச் சிறப்பிதழ்-2017.

க.இரகுபரன், தேவகுமாரி ஹரன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக

12888 – எம்மவர்கள்: மறக்கப்படமுடியாத ஆளுமைகள்.

த.கலாமணி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5 x 14.5

13015 யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் பிரிவு யுயின் அனுசரணையில் வலம்புரி பத்திரிகையில் வெளிவந்த அறிவியல் கட்டுரைகளுக்கான சுட்டி: ஆவணி 2009-மார்கழி 2017.

நடராசா பிரபாகர், கல்பனா சந்திரசேகர் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், இல. 84, கல்லூரி வீதி, நீராவியடி, 1வது பதிபபு, 2018. (அச்சகவிபரம் தரப்படவில்லை).(4), iv, 49 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: