ஸபீர் ஹாபிஸ். சாய்ந்தமருது: அல்ஹ{தா பப்ளிகேஷன், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 130 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 955-8911-01-X. நான்-மனம்-அவள், பசி, அறு, பயணம், பாத்தும்மா, வெளிச்சம், வயல், நிறங்கள், அயல்வீடு, ஆற்றங்கரை ஆகிய பத்துச் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. பின்னிணைப்பில் “ஆற்றங்கரை மற்றும் பிற கதைகளுடன் ஸபீர் ஹாபிஸ்”, “பசுமை நினைவுகள்” ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. “தமது ஆற்றங்கரை கதை மூலம் நவீன கதைசொல்லிகளில் ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் ஸபீர் ஹாபிஸ். தமது மண்ணின் வாழ்வையும் வாழ்வு சார்ந்த மனிதர்களையும் எழுத்தில் கோட்டுச் சித்திரங்களாக உயிர்கொண்டு உலவவிடுகிறார். நம்மோடு நேற்று வாழ்ந்தவர்கள் இன்று வாழ்பவர்கள் எல்லோரும் கதாமாந்தர்களாக கைகோர்த்து வருகிறார்கள். உன்னதமானதோர் தமிழ்நடை இவை எல்லாவற்றையும் சாத்தியமாக்கியிருப்பது ஸபீரின் பாக்கியமா? நமது பாக்கியமா? ஸபிரின் ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் இடையே ஒரு மாயப்பாலம் இணைக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஒரே மூச்சில் கதைகளை வாசிக்கும்போது கதைகளனைத்தும் ஒரு நேர்கோட்டில் சென்று நிறைவது அலாதியானதோர் அனுபவம்” (எஸ்.எல்.எம்.ஹனிபா. மன்னுரையில்).