14681 இனிப்புக் கதைகள்.

த.அஜந்தகுமார். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958- 03-0. அனுபவங்களும் சிறு புனைவுகளும் இணைந்த எளிமையான மொழிநடையில் உருவான பதின்நான்கு கதைகளும் யாழ்ப்பாணத்தில் வெளியாகிவந்த “புது விதி” என்ற வார இதழில் அவ்வப்போது பிரசுரமாகியவை. நாட்குறிப்பு எழுதுதலின் சுயசரிதைப் பாணியில் அமைந்துள்ள இக்கதைகள் நினைந்துருகல் மற்றும் நினைவில் தோய்தலுக்கான வழியைத் திறக்கின்றது. மறைந்துபோன வாழ்வின் மனதை நெருடும் இனிய நினைவுகளைப் பதிவாக்கும் இப்பதிவுகளைப் படிப்பவர் அனைவரும் தத்தமது அனுபவங்களை வைத்துப் பொருத்திப் பார்க்கும் தூ ண்டுதலை இக்கதைகள் தருகின்றன. மேலும் ஒவ்வொரு படைப்பின் இறுதிப்பகுதியில் காணப்படும் பதிவுகள், நெருக்கடிகளின் உளவியல் பரிமாணங்களை படைப்பாளியின் தன்விசாரணையாகக் காணமுடிகின்றது. ஒவ்வொரு தலைப்பின் கீழும் நான்கு நான்கு பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் முதல் மூன்று பகுதிகள் ஆசிரியரின் வாழ்வனுபவங்களைப் பேசுவனவாகவும் நான்காம் பகுதி அவ்வனுபவங்களின் படிப்பினைகளை அலசுவதாகவும் உள்ளன. ஜீவநதி வெளியீட்டகத்தின் 136ஆவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

12251 – பொருளியல்: முதற் பகுதி.

H.M.குணசேகர, W.D.லக்ஷ்மன். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 2வது பதிப்பு, 1977, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). vii, 96 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை:

13002 சி++ மொழி (முதல் பதிப்பு)

ந.செல்வகுமார். யாழ்ப்பாணம்: கணினிக் கல்வி நிலையம், 100, மணிக்கூட்டு வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).x, 218 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 955-97996-0-6.

12549 – செந்தமிழ்ப் பயிற்சி (வாசிப்பு நூல் ): ஐந்தாம் வகுப்புகளுகுரியது.

சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு. கோப்பாய்: செல்வி சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு, விரிவுரையாளர், மகளிர் அரசினர் ஆசிரிய கலாசாலை, 2வது பதிப்பு, 1964, 1வது பதிப்பு, 1958. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

14058 வெசாக் சிரிசர 2008.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச ஊழியர் பௌத்த சங்கம், 53-3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 2008. (கொழும்பு: ANCL,

14686 ஒரு நெக்லசும் ஆண் குழந்தையும்: சிறுகதை கதைத் தொகுப்பு.

M.I.M.முஸம்மில். கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (சென்னை 600034: மலர் கிறாப்பிக்ஸ்). viii, 117 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5×12 சமீ. உள்நாட்டு இறைவரித்