14681 இனிப்புக் கதைகள்.

த.அஜந்தகுமார். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958- 03-0. அனுபவங்களும் சிறு புனைவுகளும் இணைந்த எளிமையான மொழிநடையில் உருவான பதின்நான்கு கதைகளும் யாழ்ப்பாணத்தில் வெளியாகிவந்த “புது விதி” என்ற வார இதழில் அவ்வப்போது பிரசுரமாகியவை. நாட்குறிப்பு எழுதுதலின் சுயசரிதைப் பாணியில் அமைந்துள்ள இக்கதைகள் நினைந்துருகல் மற்றும் நினைவில் தோய்தலுக்கான வழியைத் திறக்கின்றது. மறைந்துபோன வாழ்வின் மனதை நெருடும் இனிய நினைவுகளைப் பதிவாக்கும் இப்பதிவுகளைப் படிப்பவர் அனைவரும் தத்தமது அனுபவங்களை வைத்துப் பொருத்திப் பார்க்கும் தூ ண்டுதலை இக்கதைகள் தருகின்றன. மேலும் ஒவ்வொரு படைப்பின் இறுதிப்பகுதியில் காணப்படும் பதிவுகள், நெருக்கடிகளின் உளவியல் பரிமாணங்களை படைப்பாளியின் தன்விசாரணையாகக் காணமுடிகின்றது. ஒவ்வொரு தலைப்பின் கீழும் நான்கு நான்கு பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் முதல் மூன்று பகுதிகள் ஆசிரியரின் வாழ்வனுபவங்களைப் பேசுவனவாகவும் நான்காம் பகுதி அவ்வனுபவங்களின் படிப்பினைகளை அலசுவதாகவும் உள்ளன. ஜீவநதி வெளியீட்டகத்தின் 136ஆவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

12515 – பாடவிதான முகாமைத்துவமும் பாடசாலை ஒழுங்கமைப்பும் (அத்தியாயம் 7-12).

ஆசிரிய கல்வி நிறுவகம். மகரகம: ஆசிரிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1993. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 1-டீஇ P.வு. டீ சில்வா மாவத்தை). 143 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

13A04 – கண்டிராசன் கதை.

சாரல்நாடன். சென்னை 600 098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-டீ, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 2வது பதிப்பு, நவம்பர் 2012, 1வது பதிப்பு, ஜுன் 2005. (சென்னை 600 014: பாவை