14684 உளமனச் சித்திரம்.

முத்து இராதாகிருஷ்ணன். திருக்கோணமலை: மதுஷா வெளியீட்டகம், 164/1, திருஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 113 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955- 9817-3-4. வட மாகாண கல்வித் திணைக்களத்தில் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் நூலாசிரியரின் சிறுகதைத் தொகுப்பு இது. இதில் மனவெளி, அப்பா, நானே நானா, எரிநட்சத்திரம், கூழ்ப்பானை, கரிக்கோச்சி, பஞ்சநாதன் போட்ட எட்டு, வழித்துணை, பந்தம், தகசாக்காவும் நானும், யூட்டா என்கிற யூட் கென்றி ராஜ்குமார், அவனும் ஓர் பாரதி, எப்பவோ முடிந்த காரியம் ஆகிய 13 கதைகள் இடம்பெற்றுள்ளன. இவரது மானிடச் சிக்கல் என்ற நாடக நூல் 1998இலும், சிறுவர் அரங்கு என்ற நூல் 2002இலும் துயரப்பாறை என்ற மற்றொரு நாடக நூல் 2006இலும் பசுமைத் தாயகம் என்ற சிறுவர் இலக்கிய நூல் 2009இலும் தேசிய சாகித்தியப் பரிசில்களைப் பெற்றுக்கொண்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55061).

ஏனைய பதிவுகள்

14366 இந்து தீபம்: 1999.

இரா.ரமேஷ்சங்கர் (இதழாசிரியர்), எம்.யோகேந்திரன், எஸ். சுபாஷ் (உதவி ஆசிரியர்கள்). கொழும்பு: இந்து மன்றம், கொழும்பு பல்கலைக்கழகம், 1வது பதிப்பு,ஓகஸ்ட் 1999. (கொழும்பு: ஜெயா ஓப்செட் பிரின்டர்ஸ்). (100) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,