எஸ்.பி.கிருஷ்ணன் (புனைபெயர்: வேரற்கேணியன்). யாழ்ப்பாணம்: எஸ்.பி.கிருஷ்ணன், பிரவின் இல்லம், 224/4, கண்டி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண மாநகர கூட்டுறவுச்சங்க அச்சகம்). 98 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ. பரிசுபெற்ற நான்கு கதைகள் உட்பட பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு. காயங்கள் (கொழும்பு நதி சஞ்சிகையின் பரிசு பெற்றது), வாழ்ந்து காட்டுகிறேன் (கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பரிசு பெற்றது), முட்கம்பி வேலிக்குள்ளே (ஞானம் மாத இதழின் பரிசு பெற்றது), மற்றவை நேரில் (ஞானம் மாத இதழின் பரிசு பெற்றது), பெண்ணிற் பெருந்தக்க, கற்புச் செல்வி, தன்மானம், அந்தப் பதினைந்து நாட்கள், மாற்றங்கள், எங்கிருந்தோ வந்தவள், என் கண்களே சாட்சி ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இந் நூல் ஆசிரியரின் பத்தாவது இலக்கியப் படைப்பாகும்.