எம்.எம்.அலி அக்பர். கிண்ணியா: பேனா வெளியீடு, பழைய இலங்கை வங்கி வீதி, கிண்ணியா-4, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). xvi, 112 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978- 955-0932-01-6. ஓய்வுபெற்ற அதிபரான கலாபூஷணம் எம்.எம்.அலி அக்பர் கல்வித்துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். பணி ஓய்வுபெற்றபின் 2008முதல் எழுதி வருகிறார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து எழுதப்பட்ட இவரது தேர்ந்த 12 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஜன்னல் தாரகை, அவளின் விதி அப்படி, புதிய வாழ்க்கை, இனி உன் பிள்ளை உன்னிடமே, கமால் ஐயா மௌத்து, ஷாஹிப் ஹாஜியார், அறுந்த உறவு அறுந்தது தான், இந்துஜா, கடைசி ஆசை, இறைவன் நியதி, கடைசி வேரின் ஈரம், இதயத் தாகம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. தான் காணும் வாழ்வியல் கோலங்களை சமூக அக்கறையுடன் அவலச்சுவை கொண்டமைந்த ஜன்னல் தாரகை, அவளின் விதி அப்படி என்பன போன்ற சிறுகதைகளின் மூலம் விளக்குகின்றார்.
12933 – தணிகை-பணிநயப்பு மலர்: கல்விப் பணியில் நான்கு தசாப்தங்கள்.
கந்தையா ஸ்ரீகணேசன், சிவகுருநாதன் கேசவன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கலாநிதி ச.நா.தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணிநயப்புக் குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர், 2009.(அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 237 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25