14688 கடைசி வேரின் ஈரம்: சிறுகதைகள்.

எம்.எம்.அலி அக்பர். கிண்ணியா: பேனா வெளியீடு, பழைய இலங்கை வங்கி வீதி, கிண்ணியா-4, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). xvi, 112 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978- 955-0932-01-6. ஓய்வுபெற்ற அதிபரான கலாபூஷணம் எம்.எம்.அலி அக்பர் கல்வித்துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். பணி ஓய்வுபெற்றபின் 2008முதல் எழுதி வருகிறார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து எழுதப்பட்ட இவரது தேர்ந்த 12 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஜன்னல் தாரகை, அவளின் விதி அப்படி, புதிய வாழ்க்கை, இனி உன் பிள்ளை உன்னிடமே, கமால் ஐயா மௌத்து, ஷாஹிப் ஹாஜியார், அறுந்த உறவு அறுந்தது தான், இந்துஜா, கடைசி ஆசை, இறைவன் நியதி, கடைசி வேரின் ஈரம், இதயத் தாகம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. தான் காணும் வாழ்வியல் கோலங்களை சமூக அக்கறையுடன் அவலச்சுவை கொண்டமைந்த ஜன்னல் தாரகை, அவளின் விதி அப்படி என்பன போன்ற சிறுகதைகளின் மூலம் விளக்குகின்றார்.

ஏனைய பதிவுகள்

14798 மலைச்சாரலின் தூவல் (நாவல்).

மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புதராணி காசிலிங்கம்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 142 பக்கம், விலை: ரூபா

14809 ரஸ்யாவின் ரஸ்புட்டீன் தீர்க்கதரிசியா? மக்கள் புரட்சிக்கு வித்திட்டவரா? (சரித்திர நாவல்).

எம்.ரி. செல்வராஜா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 94: பி.வி.ஆர். ஆப்செட்). xxx, 390 பக்கம்,

14071 தென்கிழக்கு இலங்கையின் பண்டைய இந்துசமய வரலாறு.

என்.கே.எஸ்.திருச்செல்வம். கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், இல. 91/5, சிற்றம்பலம் ஏ.கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xx,