14690 கறுத்த கோடுகள்: சிறுகதைகள்.

ஏ.எஸ்.எம்.நவாஸ். கொழும்பு 14: திருமதி ஹபீலா நவாஸ், சினிலேன்ட் பதிப்பகம், 1வது பதிப்பு, 2017. (வத்தளை: ஏஞ்சல் அச்சகம்). 89 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-38038-0-1. எண்பதுகளில் தனது மணிக் கவிதையை சிந்தாமணி (தினபதி-சிந்தாமனி)யில் வடித்த ஏ.எஸ்.எம்.நவாஸ், கால் நூற்றாண்டையும் கடந்து தேசியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இன்னமும் எழுதிவருகின்றார். 1995-2015 காலகட்டத்தில் மித்திரன், தினகரன், மல்லிகை, இருக்கிறம், இனிய நந்தவனம், ஆகிய ஊடகங்களில் எழுதப்பட்ட சிறுகதைகளில் தேர்ந்த 14 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. கருவைத் தொட்ட உயிர் (மித்திரன், 1995), யாழ்ப்பாணம் பார்ப்போமா? (2002), கறுத்த கோடுகள் (தினகரன், 2006), பொறியில் எலி (மல்லிகை, 2008), நிழல் (மல்லிகை, 2006), திறப்பு (மல்லிகை 2008), அவன் அவள் (இருக்கிறம், 2008), அந்த ஒன்றுக்காக (2010), அம்மாவின் அழகான மனசு (இனிய நந்தவனம், 2010), பரிசோதனைகள் (தினகரன், 2011), மோசமானவர்கள் (மித்திரன், 2013), பசிக்குள் பசி (மித்திரன், 2014), தலைகுனிவு (மித்திரன், 2015), மண்ணின் மணம் (மல்லிகை, 2006) ஆகிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14823 அம்பரய.

உசுல பி.விஜயசூரிய (சிங்கள மூலம்), தேவா (தமிழாக்கம்). சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 136

12832 – சுதந்திரத்திற்குப் பின் இலங்கை: ஒரு பன்முகப் பார்வை.

ம.சண்முகநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (கொழும்பு 13: ஸ்பாட்டன் பிரெஸ், 154, ஆட்டுப்பட்டித் தெரு). (6), 86 பக்கம்,

12100 – உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோவில் புனராவர்த்தன மகாகும்பாபிஷேக விழாமலர்.

மலர்க் குழு. உரும்பிராய்: திருப்பணிச்சபை வெளியீடு, உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1973. (சுன்னாகம் திருமகள் அழுத்தகம்). (20), 60 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 215×18.5 சமீ.