க.சின்னராஜன். யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xii, 84 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4676-93-0. இத்தொகுப்பில் தமிழ் இலக்கியப் படைப்பாளி க.சின்னராஜன் அவர்களின் தேர்ந்த 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. தண்ணீர், சிங்கை நகர்க் காவலன் உக்கிரசிங்கன், காசுமாலை, சவாரி, குலப்பெருமை, உழைப்புக்கேற்ற ஊதியம், வில்லுப்பாட்டு, காய்ந்த ரோஜா, தொலையும் சத்தியங்கள், அந்தியேட்டிக் குருமார், சிறைமீட்டல், ஒரு வங்கியும் வாடிக்கையாளரும், விடிவின் பாதைக்கு, குறிஞ்சி மலர் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. கவிஞராக எழுத்துலகில் நுழைந்த சின்னராஜன், நல்லதொரு சிறுகதைப் படைப்பாளியாகவும் தன்னை இனம்காட்டியுள்ளார். ஜீவநதி வெளியீட்டகத்தின் 119ஆவது பிரசுரமாக இந் நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 270958).