14699 தாய்மை: தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்.

உ.நிசார் (இயற்பெயர்: H.L.M. நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2019. (மாவனல்ல: எம்.ஜே.எம். அச்சகம், 119, பிரதான வீதி). xi, 108 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0503-16-2. ஏற்கெனவே கவிதை, சிறுகதை, சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள் என 25 இற்கும் அதிகமான நூல்களைத் தந்துள்ள உ.நிசார் எழுதிய மற்றுமொரு சிறுகதைத் தொகுதி இது. இந்நூலில் உடுநுவர நிசார் எழுதிய தாய்மை, பறந்து செல்லும் பறவைகள், காலம் பதில் சொல்லட்டும், பட்டுச் சாரம், மனம் கொண்டது மாளிகை, வன்முறைகள், பெரிய மீன்கள், பச்சை மனிதன், உறுத்தும் உள்ளங்கள் ஆகிய ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25664).

ஏனைய பதிவுகள்