அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2015. (திருக்கோணமலை: சண் பிரிண்டர்ஸ், 224, மத்திய வீதி). xii, 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978- 955-4628-18-2. சுமைதாங்கி சாய்ந்தால், பகல் கொள்ளை, நாற்காலி ஆசை, நாளை விடிந்தால் நோன்புப் பெருநாள், சில வேளைகளில் சில மனிதர்கள், பிரிவெல்லாம் பிரிவல்ல, அவனுக்கு அவனே எடுக்கும் விழா, திருந்திய உள்ளங்கள், மாற்றம், இறைவன் கொடுத்த பரிசு, மாஸ்டர் ஹஜ்ஜுக்குப் போகிறார், பிழையான சம்பாத்தியம் கொடுத்த பரிசு, நோன்புக் கஞ்சி தந்த வாழ்வு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 13 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. திருந்திய உள்ளங்கள் நூலின் ஆசிரியர் மன்சூர் இந்த நூலின் ஊடாகச் சொல்ல விளைவது மாணவர் சமூகத்திற்குள்ளும், ஆசிரியர் சமூகத்திற்குள்ளும் ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதுதான். அந்த மாற்றம் குறித்து பேசுகின்ற போது பல விஷயங்களை துணிச்சலுடன் வெளிப்டையாகப் பதிவுசெய்கின்றார். பாடசாலை என்கின்ற சூழல் குறித்த அதிகம் கவனம் செலுத்துகின்றார். ஊழல்கள் வெளியில் இல்லை அவை பாடசாலைக்குள் தான் இருக்கின்றன என்பதை அவர் கதைகள் மூலமாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார். நூலாசிரியர் மன்சூர் ஆசிரியராக இருந்து, ஆசிரிய ஆலோசகராக உயர்ந்ததினால் தான் அனுபவித்த பல விடயங்களை ஆதங்கங்களாக இந்த நூலில் வெளிக்காட்டியிருக்கிறார். அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூர், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றுபவர். சிறந்த விமர்சகராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்டவர்.