14702 நாங்கள் மனித இனம்: உருவகக் கதைகள்.

U.L.ஆதம்பாவா. கல்முனை: சாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, நவம்பர் 1991. (சாய்ந்தமருது: நெஷனல் அச்சகம்). 80+18 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 17.5×12 சமீ. கல்முனை ஸாஹிறா கல்லூரியின் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய வேளை வெளியிடப்பெற்ற இந்நூலில், ஆசிரியரின் தேர்ந்த 21 உருவகக் கதைகள் (Metaphor Stories) இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 1961இல் கவிதைப்படைப்பொன்றின் மூலம் இலக்கியத்துறையில் கால் பதித்தவர் யூ எல். இதில் அனுபவம், சிறுமையும் பெருமையும், இரை, பெருந்தன்மை, பழக்கம், மாற்றம், வெற்றியும் தோல்வியும், நாங்கள் மனித இனம், கர்வம், பழம் பெருமை, சுமை, மதிப்பு, வாழ்வு, இப்படியும் சில போலிகள், அந்த மனிதன், அழகு அழுகிறது, உறவு, குருவுக்குக் கௌரவம், பொறுப்புணர்ச்சி, இறப்பு, உண்மை தெளிந்தது ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இது கல்முனை சாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆறாவது வெளியீடாக வெளிவருகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46374).

ஏனைய பதிவுகள்