14703 நாட்குறிப்பு (சிறுகதைத் தொகுப்பு).

தங்கராசா செல்வகுமார். கொழும்பு 10: எஸ். கொடகே சகோதரர்கள், 661,663,675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 160 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-9625-8. 18 தவறிய அழைப்புக்கள், கடமை-காதல்-கட்டுப்பாடு, மோகம், நாட்குறிப்பு, நடிகர் கிரிதரன் பேட்டி, எதிரியை உருவாக்குவது எப்படி? தன்முனைப்பு, கைபேசி, கலைஞன் ஆகிய ஒன்பது சிறுகதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கு கின்றது. குப்பிழானைச் சேர்ந்த தங்கராசா செல்வகுமார், தன் ஆரம்பக் கல்வியை குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் தொடங்கியவர். தொடர்ந்த இடப்பெயர்வுகளினூடாகப் பயணித்து, இறுதியாக வசாவிளான் மகாவித்தியாலயத்தில் தன் பாடசாலை வாழ்விற்கு முற்றுப்புள்ளி கண்டவர். உடுவில் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றுகின்றார். நாட்குறிப்பு இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு.

ஏனைய பதிவுகள்

14598 கறுப்பு வானம்.

நெடுந்தீவு முகிலன். சென்னை 600078: நீர் வெளியீடு, எண் 10, ஆறாவது தெரு, முதல் பிரிவு, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 72 பக்கம், விலை: இந்திய ரூபா