தங்கராசா செல்வகுமார். கொழும்பு 10: எஸ். கொடகே சகோதரர்கள், 661,663,675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 160 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-9625-8. 18 தவறிய அழைப்புக்கள், கடமை-காதல்-கட்டுப்பாடு, மோகம், நாட்குறிப்பு, நடிகர் கிரிதரன் பேட்டி, எதிரியை உருவாக்குவது எப்படி? தன்முனைப்பு, கைபேசி, கலைஞன் ஆகிய ஒன்பது சிறுகதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கு கின்றது. குப்பிழானைச் சேர்ந்த தங்கராசா செல்வகுமார், தன் ஆரம்பக் கல்வியை குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் தொடங்கியவர். தொடர்ந்த இடப்பெயர்வுகளினூடாகப் பயணித்து, இறுதியாக வசாவிளான் மகாவித்தியாலயத்தில் தன் பாடசாலை வாழ்விற்கு முற்றுப்புள்ளி கண்டவர். உடுவில் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றுகின்றார். நாட்குறிப்பு இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு.
12400 – சிந்தனை: தொகுதி II (புதிய தொடர்) இதழ் 2 (ஆடி 1984).
சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1984. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). (4), 160 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 24.5×17