14704 நிலவு குளிர்ச்சியாக இல்லை.

வடகோவை வரதராஜன் (இயற்பெயர்: S.T.வரதராஜன்). சென்னை 600017: சிவவாசுகி பதிப்பகம், J.8, காஞ்சி காலனி, தெற்கு போக் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (சென்னை 5: சென்னை பிரிண்டர்ஸ்). xvi, 144 பக்கம், விலை: இந்திய ரூபா 60.00, அளவு: 20.5×14.5 சமீ. இலங்கையில் கோப்பாய் வடக்கில் வதியும் வடகோவை வரதராஜன் 1980-1990 காலப்பகுதியில் இலங்கை இதழ்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நிலவு குளிர்ச்சியாக இல்லை. நிலவு ஏன் குளிர்ச்சியாக இல்லாமல்போனது என்பதை தான் வாழும் கிராமத்தின் மண்வாசனையுடன் பதிவுசெய்கிறார். இந்த நூலின் மற்றும் ஒரு சிறப்பு இதற்கு அணிந்துரை எழுதியிருப்பவர் மறைந்த மூத்த கவிஞர் கலாநிதி இ.முருகையன். ஆனால் இந்நூலைப் பார்க்காமலேயே விடைபெற்று விட்டார். இந்நூலில் வரதராஜனின் அது ஒரு மழைக்காலம், மொழி பெயர்ப்பு, மனவுரிவும் மரவுரிவும், மழைப் பஞ்சாங்கம், எறும்புக்குத் தெரியுமா?, நேர்முக வர்ணனை, மலினப்பட்ட மானிடங்கள், நிலவு குளிர்ச்சியாக இல்லை, வெளிறிகள், உப்பு, மனோபாவம், தாய்ப் பறவையும், சேய்ப் பறவையும் ஆகிய பன்னிரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. வடகோவை வரதராஜன் யாழ்ப்பாணம்- கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். குண்டகசாலையில் விவசாய விஞ்ஞான டிப்ளோமா பட்டம் பெற்ற இவர் தற்போது தனது சொந்த ஊரான கோப்பாய் வடக்கிலே கிராம சேவகராகக் கடமையாற்றுகின்றார். இவர் அண்மையில் சிறந்த கிராமசேவகருக்கான விருதினைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்தில் வெளிவரும் கணையாழி, தாமரை போன்ற சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்து பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

13002 சி++ மொழி (முதல் பதிப்பு)

ந.செல்வகுமார். யாழ்ப்பாணம்: கணினிக் கல்வி நிலையம், 100, மணிக்கூட்டு வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).x, 218 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 955-97996-0-6.

14806 மொழியா வலிகள் பகுதி 4.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு ஓகஸ்ட் 2018. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 282 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN:

13A25 – பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திராவும் ஈழத்து நாடக மரபும்.

சி.மௌனகுரு. ராஜகிரிய: விபவி மாற்றுக் கலாசார மையம், 51/7, ராஜாஹேவாவித்தாரண மாவத்தை, ராஜகிரிய வீதி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). 55 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20