14705 நிலவுக்குள் சில ரணங்கள் (சிறுகதைத் தொகுதி).

வஸீலா ஸாஹிர். நீர்கொழும்பு: பைந்தமிழ் பதிப்பகம், 121, கல்கட்டுவ வீதி, பெரியமுல்லை, 1வது பதிப்பு, ஜுன் 2016. (கொழும்பு 10: யூ.டீ.எச். கம்ப்யூபிரின்ட், 51/42, மொஹிதீன் மஸ்ஜித் வீதி). vii, 56 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, விலை: ரூபா 350., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-43260-0-2. கல்லொளுவ மினுவாங்கொட வஸீலா ஸாஹிர் சிந்தாமணி, தினகரன், நவமணி, போன்ற இதழ்களின் வழியாகவும், இலங்கை வானொலியின் மூலமும் எழுத்துலகில் தடம் பதித்துக் கொண்டவர். நீர்கொழும்பு முகர்ரமா சர்வதேசப் பாடசாலையின் ஆசிரியையான இவர் இன்றைய நவீன யுகப் பெண்கள் படும் அவலங்கள், திருமணமான பெண்களும் விதவைப் பெண்களும் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்வியல் போராட்டம், இஸ்லாமிய சமூகத்தில் ஆணாதிக்கத்தின் இறுக்கம், அதன் கொடூரம் ஆகியவற்றைத் தனது கதைகளின் வழியாகப் பதிவுசெய்பவர் இவர். வஸீலா ஸாஹிர் எழுதியதில் தேர்ந்த சில சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும். இத்தொகுப்பில் கானல் நீர், எதிர்பார்ப்பு, என் ஒளி, விடியும் நாட்கள், அவள் ஒரு தொடர்கதை, அந்த நிமிடம், பாதி உறவே, அந்த நாலு பேர், மீள் அழைப்பு, வேரில் துடிக்கும் இதயங்கள் ஆகிய பத்துச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65120).

ஏனைய பதிவுகள்