ஆ.வடிவேலு. பருத்தித்துறை: ஆ.வடிவேலு, வடிவகம், தும்பளை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (சுன்னாகம்: கிருஷ்ணா பிறின்ரேர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி). xiv, 126 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-44548- 2-8. இந்நூலில் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் உள்ள அறிவுடைமை, குற்றம் கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை, வலி அறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் ஆகிய பத்து அதிகாரங்களில் உள்ள ஒவ்வொரு குறளுக்கும் பொருத்தமான ஒவ்வொரு கதையை எழுதித் தொகுத்திருக்கிறார்.