14710 பூ (சிறுகதைகள்).

க.பரராஜசிங்கம் (புனைபெயர்: துருவன்), செங்கை ஆழியான் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). ix, 92 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 20×14.5 சமீ. துருவன் என்ற புனைபெயரைச் சூடிக்கொண்ட அமரர் க.பரராஜசிங்கம் (22.11.1943- 07.04.1989), “பபூன் இரத்தினம்” எனப் பிரபல்யம் பெற்ற கலைஞர் நமசிவாயம் கனகரத்தினம் அவர்களின் மகனாவார். யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை சிறப்புப் பட்டதாரியுமாவார். சிறுகதையாளராக மாத்திரமின்றி நடிகராகவும் இயக்குநராகவும் பல்கலைக்கழக நாடகத்துறையில் பிரபல்யம் பெற்றிருந்தவர். கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி சிவசரவணபவனின் வழிகாட்டலில் தன் இலக்கியப் பாதையை வகுத்துக்கொண்ட இவர் பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதிய சிறுகதைகளுட் சில ஒரு தொகுதியாக அவரின் மறைவின் 20 ஆண்டுகளின் பின்னர் நூலுருப்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் குருடு, விளாம்பழம், வாய்க்கால், வியாபாரம், பூ, நானும் ஒருவன், ஒரு குலை உள்ளிட்ட பத்துச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 51172).

ஏனைய பதிவுகள்