ஜிஃப்ரி ஹாஸன் (இயற்பெயர்: ஏ.எச்.எம். ஜிஃப்ரி). வாழைச்சேனை 05: எதிர்ச்சொல் வெளியீட்டகம், கே.கே.வீதி, 1வது பதிப்பு, மே 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 84 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43206-1-1. இந்நூலில் ஜிஃப்ரி ஹாஸன் எழுதிய மீதமிருக்கும் கனவு, வேலை இல்லாப் பட்டதாரி, மே புதுன்கே தேசய (இது பௌத்தரின் தேசம்), கம்யூனிஸ்ட், கணக்கு வாத்தியார், நினைவின் மரணம், சலீம் மச்சி, மண்வாசகம், போர்க்குணம் கொண்ட ஆடுகள், இரண்டு கரைகள் ஆகிய பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியரின் முதலாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். ஜிஃப்ரி ஹாஸன் 1983இல் வாழைச்சேனை பாலைநகர் கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் அபுல் ஹஸன், ஆமினா உம்மா தம்பதியர். பாலைநகர் ஜிஃப்ரி என்ற பெயரில் ஆரம்பத்தில் கவிதைகளை எழுதத் தொடங்கியவர். பின்னர் சிறுகதைகள், விமர்சனங்கள், இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனத் தன் எழுத்துப் பணியை விரிவாக்கியவர். சபரகமுவ பல்கலைக்கழகத்திலும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்ற இவர் ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார். ஏற்கெனவே அரசியல் பௌத்தம் என்ற கட்டுரை நூ லையும், விலங்கிடப்பட்ட நாட்கள் என்ற கவிதைத் தொகுதியையும், மூன்றாம் பாலினத்தின் நடனம் என்ற மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.
5 Lowest Put Casinos United states Casinos which have 5 Deposit 2025
Content 5 lowest put casinos Frequently asked questions | serious link Gaming Pub – deposit step one and also have 31 100 percent free revolves