14713 மலைமகள் கதைகள்.

மலைமகள். சென்னை 600024: வடலி வெளியீடு, F-1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், 8A, அழகிரி நகர் 4வது குறுக்குத் தெரு, லட்சுமிபுரம், வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). 103 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-0-9919755- 5-6. பதினைந்து கதைகள் அடங்கிய இத்தொகுதி பல தளங்களில் முக்கியமானது. அவர் எழுதிய விலை, எதுவரை, ஒரு கோப்பை தேநீர், முறுங்கையை விட்டு இறங்காதவர்கள், புதிய கதைகள், பயணம், அங்கோர் காட்டிடைப் பொந்திலே, யாரோ யார் இவர் யாரோ?, யார் உன்னை அழைத்தார், கதவுகள் திறந்துதான் உள்ளன, எனது மனிதர்கள்-1, எனது மனிதர்கள்-2, அனுமதி, முற்றுகை, இறுதி வணக்கம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பெற்றவை. திரும்பிப் பார்த்தல் என்பதற்ற போர்க்களத்தில் உரிய வேளையில் துப்பாக்கி ஒரு கணம் தாமதித்தாலும் தம் உயிர் மௌனித்துவிடும் ஆபத்து நிறைந்ததான களங்களில் இந்தப் பெண்கள் எவ்வளவு லாவகமாக “எதிரியை” எதிர்கொண்டார்கள், உயிரைத் துச்சமென மதித்து தாம் நம்பிய விடுதலைக்காகப் போராடினார்கள், கூடவே “வெளியில்” மரபான சமூகத்தால் மலரிலும் மென்மையானதென அணுகப்பட்ட உடல் உறுப்புகள் எவ்வாறு தமக்கான மரபான பணிகளை மீறி “வழமை”யை உடைத்து இயங்கின என்பதைக் காப்பரண்களும் வேலிகளும் போட்ட காந்தள் விரல்களால் எழுதிச் செல்கிறார் மலைமகள். இந்நூலின் பின்னிணைப்புகளாக, காலத்தின் சாட்சி-முதலாவது பதிப்பிற்கான தாமரைச்செல்வியின் முன்னுரை, புதையல் – என்ற தலைப்பில் ஆ.உலகமங்கை எழுதிய முதலாம் பதிப்பிற்கான பதிப்புரை, சொல்லாத செய்திகள் – என்ற தலைப்பில் மலைமகள் முதற்பதிப்பிற்கு எழுதிய பின்னுரை ஆகியன இடம்பெற்றுள்ளன. மலைமகள் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் மாலதி படையணியில் 2ஆம் லெப்டினன்ட் தரப் போராளியாவார். இந்நூலின் முதற் பதிப்பு, கப்டன் வானதி வெளியீட்டகத்தினால், கிளிநொச்சியிலிருந்து 2004இல் வெளியிடப்பட்டிருந்தது.

ஏனைய பதிவுகள்

The play2win online fresh Put

Articles Put Nz1 Rating 150 100 percent free Revolves In the Bizzo Local casino Cons Of five Put Bingo 5 Minimal Deposit Casinos Canada For