14715 மானுடம் தோற்றிடுமோ?.

எஸ்.கருணானந்தராஜா. சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2019. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). xii, 180 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 18×13 சமீ., ISBN: 978-93- 86031-82-2. மானுடம் தோற்றிடுமோ? துணையானாள், நீலநிற வான்கடிதம், சாகாத ராசு, தொல்லைபேசி, வீட்டுக்கு வீடு, அண்ணாவும் அக்காவும், காதலி சீமா, யார் செய்த குற்றம்? ஐயோ எங்கள் மகள், சங்கரி ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற 11 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவை வீரகேசரி, ஞானம், ஒரு பேப்பர், உதயசூரியன், மாணவர் உதவி மைய வெளியீடுகள், காற்றுவெளி, யாழ்.கொம், பிரதிலிபி ஆகிய ஊடகங்களில் வெளிவந்திருந்தன. “யுகசாரதி” என்ற கவிஞனாக அடையாளம் பெற்றிருந்த இப்படைப்பாளியின் முதலாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்து தற்போது பிரித்தானியாவில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64858).

ஏனைய பதிவுகள்

casino

Rodadas Grátis do Cassino Online Online casino perfect Casino Nee, een no deposit bonus is meestal beperkt tot één keer per speler, per account. Je