14716 மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் (கதைகள்).

யதார்த்தன் (இயற்பெயர்: பிரதீப் குணரத்னம்). பிரான்ஸ்: ஆக்காட்டி, 63, Rue de Lisbonne, 77550 Moissy-Cramayel, 1வது பதிப்பு, ஜுலை 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 134 பக்கம், தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-7481- 00-5. இலங்கைப்பூச்சி, கோழிக்கால் பட்டியின் கடைசிப் பசுமாடு, தீட்டுத்துணி, கோலியாத், லெப்ரினன்ட் கேணல் இயற்கை, மிளகாய்ச் செடி, மக்ரலின் அறுபதாயிரம் புறாக்கள், மரநாய், மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம், இறைச்சி, வோண்டர் கோன் ஆகிய பதினொரு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. யுத்தத்தின் போதும் யுத்தத்தின் முடிவுக்குப் பின்பும் உள்ள மக்களின் மனநிலையில் உறைந்திருக்கும் கீழ்மையையும் அன்பையும் சொல்வதாக இக்கதைகள் அமைகின்றன. அனைத்துக் கதைகளின் நிகழ்களங்களும், அங்கிருக்கும் கதைமாந்தர்களும் கதைசொல்லிக்கு நெருக்கமானவரக்களாகவே தோற்றம்பெறுகின்றனர். வெவ்வேறு கதைபிரதித் துண்டுகளை இணைக்கும், கோர்க்கும் மையச் சரடாகவே கதைசொல்லி இருக்கிறார். இது தொண்ணூறு களுக்குப்பின் பிறந்து தன் பதின்ம வயது இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வாழ்ந்த அனுபவங்களுடன் எழுத ஆரம்பித்த தலைமுறையைச் சேர்ந்த யதார்த்தனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு. இறுதி யுத்தத்தின் விளிம்புவரை சென்று மீண்டு முகாம் வாழ்க்கையைக் கழித்து, தற்போது பல்கலைக்கழக மாணவராக இவர் இருக்கிறார். இணைய வெளியில் எழுத ஆரம்பித்து, இலங்கை சிற்றிதழ் சூழலுக்குள் வந்த இவர், ஆரம்பத்தில் கவிதைத்துறையில் ஈடுபாடு கொண்டு பின்னர் கதைகள் எழுதுவதில் தன் படைப்புலக விரிவாக்கத்தைக் கண்டவர்.

ஏனைய பதிவுகள்