சமூக சிற்பிகள் (மூலம்), சர்மிளா சுப்பிரமணியம் (தமிழாக்கம்), கௌரி அனந்தன் (தொகுப்பாசிரியர்). ராஜகிரிய: சமூகச் சிற்பிகள், The Social Architects, 1003/4, Park Lane, 1வது பதிப்பு, மே 2017. (கொழும்பு 13: Crescerdoo Link, 426/11, J 4/5, K Cyril C Perera Mawathe). x, 242 பக்கம், விலை: ரூபா 350.,அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7435-00-8. இந்தக் கதைகளில் வரும் சம்பவங்களும் கதை மாந்தர்களும் நிஜத்தைப் பிரதி பலிப்பவை. வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் உண்மைக் கதாபாத்திரங்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போர்ச் சூழலுக்குள் வாழத்தலைப்பட்ட இளைஞர்களின் 21 கதைகள் இதில் இடம்பெறுகின்றன. தமிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர்களின் கூட்டு முயற்சியாக இத்தொகுப்பிலுள்ள கதைகள் அமைந்துள்ளன. யாழ்ப்பாணம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை (ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம், யாழ்ப்பாணம்), நான் இன்னும் உன்னைத் தேடுகிறேன் (லக்மாலி கௌசல்யா பஸ்நாயக்க, கெப்பித்திகொல்லாவ), ஆர்.டீ.ஓ.காக்கா (ஐ.எல்.ரிப்நாஸ், ஒலுவில்), அமுதாவாகிய நான் (அமுதமலர் செல்வராசா, கிளிநொச்சி), புழுதி குமார (எஸ். சிசிர குமார, கெப்பித்திக்கொல்லாவ), மரணங்கள் மலிந்த பூமி (தட்சணாமூர்த்தி லிசாலினி, அக்கரைப்பற்று), சோனகத் தெரு (பிரதௌவுஸ் மொஹமட் பஸாரத், யாழ்ப்பாணம்), வெற்றியின் நினைவுச் சின்னம் (தங்கராசா அஜந்தன், பெரிய பரந்தன்), சலிம் முதலாளி எங்கே? (முஹம்மது ஹசைன் முகம்மது சியான், சாய்ந்தமருது), கறை படிந்த சட்டைப் பை (மரினா மரியநாயகம், பளை), குருவிக்கூடு (பெனடிக் ஸ்ரீபன்), வீடு நோக்கிய பயணம் (துஸ், தினு, கேதி, கண்டாவளை), கால்நடைகளாக புத்தளம் நோக்கி (நைனா முஹமட் அப்துல்லாஹ், யாழ்ப்பாணம்), வயல்மீது கவிந்த போர்க்கால மேகங்கள் (அருளானந்தராஜா நவேந்திரராஜா, திருக்கோவில்), சந்தேகத்தின் பேரில் (நஜிமுடீன் மொஹமட் நிப்ராஸ், மொஹமட் ரில்வான் ரில்சான், யாழ்ப்பாணம்), பூனைகள் ஒருபோதும் புலியாகாது (வரதராசா நவநீதன், வட்டுக்கோட்டை), உயிர்காத்த பலிபீடங்கள் (காளிதாசன் சனுஜன், காரைதீவு-1), குண்டு துளைத்த தரப்பாள் கூரைகள் (யோகவதனி குணபாலசிங்கம், பிரமந்தனாறு, கிளிநொச்சி), அழியாத ரணங்கள் (கந்தையா மகேந்திரன், டிக்கோயா), குருதியில் நனைந்த வெண்கொடிகள் (சமூக சிற்பி), துறவியுடன் ஒரு சந்திப்பு (கிறிசாந்தி ராஜகருண) ஆகிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.