நீர்வை பொன்னையன். கொழும்பு 6: இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம், 18, 6/1, கொலிங்வுட் பிளேஸ், 1வது பதிப்பு, மார்ச் 2019. (கொழும்பு 6: R.S.T. என்டர்பிரைசஸ், 114, W.A.சில்வா மாவத்தை). 110 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1810-30-6. 1947இல் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய நீர்வை பொன்னையன், 1957இலிருந்து இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தவர். குறிப்பாக இவரது சிறுகதை இலக்கியங்களே இவரை இலக்கிய உலகில் முதலில் அறிமுகப்படுத்தின. 1957 முதல் 2019 வரை 122 சிறுகதைகளை எழுதியுள்ள இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி “மேடும் பள்ளமும்” என்ற பெயரில் 1961இல் வெளிவந்தது. “வந்தனா” என்ற இத்தொகுதிவரை இவர் 11 சிறுகதைத் தொகுதிகளை எமக்கு வழங்கியுள்ளார். இத்தொகுதியில் வீம்பு, மன்னிப்பு, வந்தனா, மனச்சரிவு, பசி, சொத்து, கண்ணகி, பிணைப்பு, சாயல், நிர்மூலம், தற்குறி, சோதினை, சவால், ஐயாயிரம் ஆகிய 14 கதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64869).