வெற்றிச்செல்வி (தொகுப்பாசிரியர்). மன்னார்: குருவி வெளியீட்டகம், மாற்றுத்திறனாளி மாதர்களின் அமைப்பு, Women’s Organisation Working on Disability, WOWD, 1வது பதிப்பு, ஜுன் 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). x, 184 பக்கம், விலை:ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5121-00-7. இந்நூலில் தடுப்பு முகாமில் அவளைக் கண்டேன் (சந்தனா), மலரும் நினைவுகள் (திருச்செல்வி, வெற்றிச்செல்வி), கனியனுடனான காதல் (பிரபா அன்பு), பிரிவின் வலிகள் (சுகந்தி, வெற்றிச்செல்வி), வாழவைக்கும் நினைவுகள் (வெற்றிச்செல்வி), தாய்நாட்டின் பாசமும் தமக்கையின் நேசமும் (ஜெனா), துயரங்களை வென்ற நம்பிக்கை (அகமொழி), தண்ணி தண்ணி (பெனடிக்ரா), நினைவுகள் தொடரும் (கமலம்), ஆனந்தபுரம் (கீர்த்தி, வெற்றிச்செல்வி), புதையா நினைவுகள் (அரவி), விக்கினாக்கா (சுதா, வெற்றிச்செல்வி) ஆகிய பன்னிரு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை சிறுகதைகள் என்பதைவிட பன்னிரு மாற்றுத் திறனாளிச் சகோதரிகளின் சொந்த அனுபவங்களாகவும் மனதில் பொதித்து வைத்த வீரியம்மிக்க உண்மைகளாகவும் கொள்ளலாம். தாயக விடுதலை என்ற இலக்கை அடைவதற்காக இவர்களிடம் இருந்த அர்ப்பணிப்பையும் தியாக சிந்தையையும் நாம் தொடர்ந்து முன்னெடுத்தால் இந்த இயந்திர வாழ்விலிருந்து சக வாழ்விற்கு மீளலாம் என்ற பாடத்தை ஏனையோருக்கும் கற்பிக்கின்றன.