ஸக்கிய்யா ஸித்தீக் பரீத். மாவனல்லை: எக்மி பதிப்பகம், 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, 1வது பதிப்பு, ஜுலை 2010. (மாவனல்லை: எம்.ஜே.எம். பிரின்டர்ஸ், 119, பிரதான வீதி). xviii, 122 பக்கம், விலை: ரூபா 175.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-98766- 1-8. இத்தொகுதியில் திருப்பம், மங்காவடு, காலத்தின் கோலம், கண்ணீர் எழுப்பிகள், இறைத் தீர்ப்பு, திசை மாறிய பறவை, நிரபராதிகள், கோக்கி யார்?, மின்னும் தாரகை, இணங்கிப் போ மகளே, இலவு காத்த கிளி, முக்காட்டினுள் மாமி, நியதி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பதின்மூன்று சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. மாவனல்லை தெல்கஹகொடையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு தெகிவளையை வாழ்விடமாகவும் கொண்டவர் ஸக்கிய்யா ஸித்தீக் பரீத். இவர் தனது ஆரம்பக் கல்வியை தெல்கஹகொடை முஸ்லிம் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை உயன்வத்தை நூராணியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் பெற்றுக்கொண்டவர். அப்பாடசாலையில் கையெழுத்துப் பிரதியாக வெளிவந்த “தேனருவி” இதழில் தனது கன்னிப் படைப்புக்களை தவழவிட்டவர். ஆசிரியராகப் பணியாற்றும் வேளையிலேயே பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தவர். தற்போது ஆசிரியர் சேவையிலிருந்து ஒய்வுபெற்றபின் முழுநேர எழுத்துப் பணியிலும் சமூகப்பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.