யாழ். தர்மினி பத்மநாதன். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 2வது பதிப்பு, ஜனவரி 2016, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு). 80 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93- 81322-40-6. இந்நூலில் விபச்சாரி எண்பது ரூபாய், வாடகை வீடு, வித்தகி, பட்டாம்பூச்சி, தந்தையின் தாலாட்டு, முக்கோணத் தலைநரகங்கள் ஆகிய சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. போரில் மனைவியை இழந்த கணவன், கணவனையும் தந்தையையும் இழந்த பெண் மற்றும் அம்மாவை பார்க்காத பிள்ளை என்று ஒட்டுமொத்த ஈழத்து மக்களின் ஒருமித்த பிரதிபலிப்பாக இக்கதைகளை யாழ். தர்மினி பத்மநாதன் எழுதியுள்ளார். ஈழத் தமிழர்களின் ஆசைகள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் போரினால் அவர்கள் இழந்த வாழ்க்கை என நம்மை வேதனையுடன் கரைய வைக்கின்றது. எல்லாவற்றிக்கும் மேலாக தாய் நாடான தமிழ் நாட்டிலேயே அவர்களை அகதிகள் என்று அடையாளபடுத்துவது எவ்வளவு பெரிய குற்றமென்பதை கன்னத்தில் அறைந்து உணர்த்துகிறது.