மருதமைந்தன் (இயற்பெயர்: M.S.S. ஹமீட்). காத்தான்குடி-02: M.S.S. ஹமீட், 128/7, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). viii, 114 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-52293-1-9. சமூகத்தில் காணப்படும் விருப்பத்துக்குரியவை, விரும்பத் தகாதவை, உயர்வு, உறுத்தல், தலைகுனிவு, அருவருக்கத்தக்கவை, போன்றன ஏற்படுத்திய தாக்கங்கள் சிறுகதைகளாக முளைகொண்டுள்ளன. சமூக விழுமியங்களை நிலைநிறுத்தி அவற்றின் மூலம் சமூக மேம்பாட்டைக் காணவேண்டும் என்ற ஆதங்கத்தினை இக்கதைகள் மூலம் ஏற்படுத்துகின்றார். மனிதம், தூரம் சென்ற உறவு, முறைச் செலவு, கபளீகரம், சிவப்புக்கோடு, அக்கினிச் சக்கரம், நெஞ்சிற் பட்ட உதை, கறந்த பால், மெத்தைப் பள்ளி பீரங்கி, மறுபாதிப் பொறிகள், கறுப்பும் ஒரு நிறம் தானே?, வெட்டிய வேரில் ஒரு முளை, இருளில் தேடிய விடியல், நச்சு மனங்கள், வந்ததும் வந்தான் ஆகிய கதைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.