இலங்கேஷ் (மூலம்), பூனாகலை அருள்கார்க்கி (இயற்பெயர்: இராஜேந்திரன் டேவிட் அருளானந்தன், தொகுப்பாசிரியர்). பண்டாரவளை: மாரிமுத்து ஜோதிகுமார், பொருளாளர், ஊவா-தமிழ் இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (பண்டாரவளை: W.A.S. பிரின்டர்ஸ், 20/14, சேனநாயக்க மாவத்தை). 80 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22/14.5 சமீ., ISBN: 978-955-42917-0-6. இந்நூலில் இலங்கேஷின் பரிசுபெற்ற படைப்புக்கள் உள்ளிட்ட ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. “இல்லையென்பதில்லை” (1996ஆம் ஆண்டு கண்டி-அகிலம் சஞ்சிகை நடத்திய போட்டியில் முதற்பரிசு பெற்றது), “மக்கள் சேவையே” (2001ஆம் ஆண்டு ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இரண்டாம் பரிசு பெற்ற கதை), “வெளிச்சம்” (1994ஆம் ஆண்டு ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவில் முதலாம் பரிசு பெற்றது), “முடிச்சு” (1999ஆம் ஆண்டு பதுளை கலை இலக்கிய வட்டம் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றது), “பேதமில்லா நெஞ்சங்கள்” (1995ஆம் ஆண்டு மாத்தறை மக்கள் சமாதான இலக்கிய மன்றம் நடத்திய போட்டியில் முதலாம் பரிசு பெற்ற சிறுகதை), “மனித நேயம்” (1994ஆம் ஆண்டு ஊவா சமூக அபிவிருத்தி நிலையம் USCOD நடத்திய இலக்கியப் போட்டியில் முதலாவது பரிசு பெற்ற கதை), “மாயை” (1997ஆம் ஆண்டு பதுளை கலை இலக்கிய வட்டத்தின் மூன்றாவது பரிசுபெற்ற கதை), “தெரிந்தம் தெரியாததும்”, “தாத்தாவும் ஒரு போராளியே” (25.11.2015 அன்று ஞாயிறு வீரகேசரியில் பிரசுரமான கதை) ஆகிய ஒன்பது சிறுகதைகளே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.