14729 கைக்குட்டை: சிறுகதைகள்.

டபிள்யூ. ஏ.சில்வா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (8), 9-144 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30- 6537-7. சிங்கள இலக்கியத்துறையில் முன்னோடிப் படைப்பாளிகளுள் ஒருவர் டபிள்யூ. ஏ.சில்வா. வெள்ளவத்தையில் மத்தியதரக் குடும்பமொன்றில் பிறந்த இவர் 1890- 1957 வரையிலான தன் வாழ்நாளில் 50 ஆண்டுகளை சிங்கள இலக்கியத்திற்கு அர்ப்பணித்து மறைந்தவர். 1907இல் தனது 17ஆவது வயதில் தனது முதலாவது நாவலை (சிரியலதா) எழுதிப் பிரமிப்புக்குள்ளாக்கியவர். சிங்களம், பாளி, சம்ஸ்கிருதம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் கொண்ட பரிச்சயம் பலரும் அறிந்தது. இவரது “கெலே ஹந்த” நாவல் சிங்களத் திரைப்படமாக்கப்பட்டிருந்தது. சிங்கள சினிமாவில் முதன்முறையாக நாவல் ஒன்று திரைப்படமானதென்ற வரலாற்றுப் பதிவு “கெலே ஹந்த” அவரது நாவலுக்கே உரியது. “கைக்குட்டை” என்ற இந்நூலில் டபிள்யூ. ஏ.சில்வா எழுதிய 11 சிறுகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. பேயின் கடிதம், பழக்கதோஷம், சுவர்க்கம், பரிசு, வைடூரியம், அமங்சிரால, நோன்மதி தினம், கைக்குட்டை, மாமாவின் விருப்பம், தலையணை உறை, முகராசி ஆகிய தலைப்பகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65495).

ஏனைய பதிவுகள்

13A04 – கண்டிராசன் கதை.

சாரல்நாடன். சென்னை 600 098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-டீ, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 2வது பதிப்பு, நவம்பர் 2012, 1வது பதிப்பு, ஜுன் 2005. (சென்னை 600 014: பாவை

14541 நீலமும் பசுமையும் நிறைந்த நல்ல உலகம்.

உடுவை எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1 காலி வீதி,

12633 – ஏட்டு மருத்துவம்(தல்பதே பிலியம் 22ஆம் தொகுப்பு).

ஆயுள்வேத திணைக்களம். கொழும்பு 8: ஆயுள்வேத திணைக்கள வெளியீடு, இல. 325, டாக்டர் எம்.எம். பெரேரா மாவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 1994. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ்). (6), 330 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14656 வாப்பாடம்மா (கவிதைகள்).

மு.இ.உமர் அலி. நிந்தவூர் 18: மு.இ.உமர் அலி, 20A, 1ம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 10: யூ.டீ.எச். கம்ப்யுபிரின்ட், மொஹிதீன் மஸ்ஜித் வீதி). xiv, 66 பக்கம், விலை: ரூபா

12590 – கேத்திர கணிதம்: முதற் புத்தகம்.

ச.சிதம்பரப்பிள்ளை. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 2வது பதிப்பு, 1954, 1வது பதிப்பு, 1953. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 252 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. ஆதார கேத்திர

12241 – நட்சத்திரப் போர்:ஒரு யுத்த நோக்கு.

மு.வரதராசா. வந்தாறுமூலை: மு.வரதராசா, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, மார்கழி 1996. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் அச்சகம்). xix, 99 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×12.5 சமீ. சர்வதேச யுத்த அரசியல் பற்றிய